1 00:00:11,678 --> 00:00:15,182 வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 2 00:00:16,517 --> 00:00:21,563 எந்த காலத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய, அதே சமயம் பிரபலமான ஒரு விலங்கு 3 00:00:22,105 --> 00:00:26,318 இருந்துள்ளது என்றால் அது நிச்சயமாக டைனோசர் தான். 4 00:00:27,361 --> 00:00:29,613 டிரைனோசரஸ் ரெக்ஸ். 5 00:00:30,656 --> 00:00:35,202 நம் அனைவரிடத்திலும் கற்பனையைக் கிளரும் ஒரு விலங்கு அது. 6 00:00:35,285 --> 00:00:38,247 அது எந்த மாதிரி விலங்காக இருந்தது? 7 00:00:38,330 --> 00:00:41,542 பார்க்க எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தது? 8 00:00:41,625 --> 00:00:45,587 இப்போது, விஞ்ஞான ஆய்வுகள் இதற்கெல்லாம் விடையளிக்கிறது. 9 00:00:45,671 --> 00:00:47,923 இது டி. ரெக்ஸ்சைப் பற்றியது மட்டும் இல்லை, 10 00:00:48,006 --> 00:00:51,343 அதன் கூடவே வாழ்ந்த மற்ற விலங்கினங்களைப் பற்றியதும் தான். 11 00:00:51,426 --> 00:00:58,016 மேலும் இப்போது வந்துள்ள இமேஜிங் தொழில் நுட்பம் அவற்றையெல்லாம் உயிர் பெற்று எழச்செய்கிறது. 12 00:01:01,436 --> 00:01:05,440 பூமி கிரகம், 66 மில்லியன் வருடங்களுக்கு முன். 13 00:01:13,949 --> 00:01:17,494 இராட்சஸ பறவைகளால் வானமெல்லாம் நிறைந்திருந்தது. 14 00:01:20,038 --> 00:01:24,084 கடல்களிலோ, பூதாகாரமான ஊர்வனங்கள் ஆழத்தை ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தன. 15 00:01:26,128 --> 00:01:29,256 மற்றும் நிலத்திலோ, அனைத்து வகையான டைனோசர்களும், 16 00:01:30,465 --> 00:01:33,218 உயிர் வாழ போராட்டத்தைச் சந்திக்கின்றன. 17 00:01:39,391 --> 00:01:45,689 டைனோசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலக்கதைப் பற்றி இப்போது நமக்கு பல தகவல்களும் கிடைத்துள்ளன. 18 00:01:49,651 --> 00:01:52,196 இது அவற்றின் கதை தான். 19 00:02:04,374 --> 00:02:09,922 உறைபனி உலகம் 20 00:02:13,509 --> 00:02:15,719 பூமியின் வடகோடி மற்றும் தென்கோடி துருவங்களில் 21 00:02:15,802 --> 00:02:19,765 வாழ்க்கைச் சூழல் மிகவும் கடினமாக இருக்கிறது. 22 00:02:22,476 --> 00:02:27,898 இருப்பினும், எப்படியோ டைனோசர்கள், இந்த துருவ பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. 23 00:02:30,442 --> 00:02:35,322 தூரத்தில் உள்ள வட அமெரிக்காவில், இந்த சிறிய வேட்டை விலங்கான டிரோமியோசார், 24 00:02:35,405 --> 00:02:39,826 எப்படியோ மூன்று மாத காலத்தை, கிட்டத்தட்ட முழுவதுமாய், இருட்டிலேயே கழித்துவிட்டது. 25 00:02:41,453 --> 00:02:44,790 கடைசியில், இப்போது வசந்த காலம் வந்து விட்டது. 26 00:02:53,090 --> 00:02:55,342 அந்த பெண் விலங்கிற்கு, சிறகாலான ஒரு கோட் இருக்கிறது, 27 00:02:55,425 --> 00:02:58,011 அதைக் கொண்டு தனக்குத் தேவையான வெப்பத்தை அது தயார் செய்து கொள்கிறது 28 00:02:58,095 --> 00:03:00,097 அதோடு முடிந்த அளவிற்கு வெப்பதை தன் உடலில் தக்க வைப்பது அவசியம். 29 00:03:01,932 --> 00:03:06,270 குளிர் பிரதேச அட்சரேகையில் வசிக்ககூடிய அனைத்து டைனோசர்களுக்கும் இது ஒரு சவாலாக அமைகிறது. 30 00:03:10,148 --> 00:03:12,943 அந்த பெண் விலங்கு, பனிமூடிய நிலத்தின் மீது விரைவாக நடக்கும்போதே, 31 00:03:13,026 --> 00:03:17,364 இதற்கு முன் தனக்கு உணவு கிடைத்த இடங்களை எல்லாம், இரைக்கு தேடிக்கொண்டே செல்கிறது. 32 00:03:21,159 --> 00:03:26,790 பனிமூடிய இந்த உலகத்தில், எதையுமே சிறியதென்று விடலாகாது. 33 00:03:35,632 --> 00:03:38,635 வழக்கம்போலவே, வெற்றி கொள்ள மிக அவசியமானது, 34 00:03:38,719 --> 00:03:44,016 சரியான... நேரம். 35 00:03:50,814 --> 00:03:52,983 பூமியின் வரலாற்றின் இந்த காலகட்டத்தில், 36 00:03:53,066 --> 00:03:55,903 பூமிக்கோள்களின் பிரதேசங்கள் கூடுதல் வெப்பநிலையை அடைந்திருந்த போதிலும், 37 00:03:56,486 --> 00:04:02,910 இந்த நிலப்பரப்புகள், அதீத பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. 38 00:04:06,747 --> 00:04:10,417 மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக சூரியன் வெளியே வரும்போது, 39 00:04:12,586 --> 00:04:16,507 ஒவ்வொரு விலங்கும், கிடைக்கும் வெளிச்சத்தையும், வரும் கோடை காலத்தையும் சிறப்பாக 40 00:04:17,216 --> 00:04:19,343 பயன்படுத்தத் தயாராக இருப்பது அவசியம். 41 00:04:24,681 --> 00:04:27,017 இந்த சிறிய டிரோமியோசர்கள், ஒன்றாகச் சேர்ந்து கொண்டே 42 00:04:28,101 --> 00:04:30,896 பெரும் இரையை பிடிப்பதற்கு வழி வகுக்க வேண்டும். 43 00:04:35,734 --> 00:04:38,278 இந்த சீசனின் முதல் வாய்ப்பு, இதோ வந்துவிட்டது. 44 00:04:40,280 --> 00:04:42,824 ஹட்ரோசோர்களின் மந்தை வருகிறது. 45 00:04:45,619 --> 00:04:49,331 இந்த வாத்தின் அலகை கொண்ட டைனோசர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த வழியாக கடந்துச் செல்லும். 46 00:04:51,834 --> 00:04:56,046 இவை வசந்த காலத்தில் புதிதாக முளைத்த தாவரங்களைத் தேடித் திரியும் பரதேசிகள். 47 00:05:06,557 --> 00:05:08,058 அவை மிகப்பெரியவை. 48 00:05:08,141 --> 00:05:12,479 டிரோமியோசரஸ்கள் ஒரு குழுவாக சேர்ந்து தாக்கினால் மட்டுமே அவற்றுக்கு இரை சிக்க வாய்ப்புள்ளது. 49 00:05:19,069 --> 00:05:22,948 இந்த மந்தை கடந்து செல்ல வேண்டிய ஆறு ஒன்று இன்னும் சற்று தூரத்தில் வருகிறது. 50 00:05:37,171 --> 00:05:40,757 அவற்றில் சில விலங்குகளால் ஆற்றை கடக்க முடியாது என்பது டிரோமியோசர்களுக்கும் தெரியும். 51 00:05:59,109 --> 00:06:04,865 பனிகாலம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் வேளையில், உருகிவரும் நீர், மிகுந்த வேகத்துடன் வருகிறது. 52 00:06:08,577 --> 00:06:12,915 இந்த வேகமாக-அடித்துச்செல்லும், ஆழமான ஆற்றை, இந்த மந்தை கடந்து செல்ல வேண்டும். 53 00:06:15,959 --> 00:06:18,795 சிறந்த பாதுகாப்பை அளிக்ககூடிய வழியை முன்னோடிகள் தேர்வு செய்ய முற்படுகின்றன. 54 00:06:27,137 --> 00:06:29,598 மற்ற விலங்குகளும், கவனத்துடன் பின்தொடர்கின்றன. 55 00:06:31,850 --> 00:06:34,728 கன்றுகள், தங்கள் பெற்றோர்களின் அருகிலேயே இருக்க முயல்கின்றன. 56 00:06:35,979 --> 00:06:39,066 இங்கே, தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும், உயிரேப் பறிபோகும் ஆபத்து உடையது. 57 00:06:41,985 --> 00:06:45,906 தங்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் முதிர்ந்த விலங்குகளுக்கு நடுக்கம் எற்படுகின்றது. 58 00:06:46,698 --> 00:06:49,952 மெல்ல நகரும் மந்தையின் இந்த தாமதம் தான் டிரோமியோசரஸ்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு. 59 00:07:03,632 --> 00:07:05,801 கன்றுகள் தான் அவற்றின் இலக்கு. 60 00:07:18,480 --> 00:07:20,983 மந்தை முழுவதும் பீதி பரவுகிறது. 61 00:07:27,948 --> 00:07:32,244 மிக நேர்த்தியாக நடந்திருக்க வேண்டிய ஒன்றில் குழப்பம் நிலவுகிறது. 62 00:07:37,583 --> 00:07:40,210 பெற்றோர்களும், கன்றுகளும் பிரிகின்றன. 63 00:08:19,249 --> 00:08:20,876 அதிர்ஷ்டவசமாக, அது தப்பித்துவிட்டது. 64 00:08:26,298 --> 00:08:30,802 மீண்டும் சீர்-செய்யப்பட்ட வரிசையில் தங்கள் பயணத்தை அவை தொடர்கின்றன. 65 00:08:34,556 --> 00:08:38,018 டிரோமியோசரகளுக்கு கிடைத்த வாய்ப்பு தவறிப்போனது போலும்... 66 00:08:40,354 --> 00:08:43,232 ஆனால் அந்த ஆறு, அவர்களுக்காக அந்த வேலையைச் செய்துள்ளது. 67 00:08:45,567 --> 00:08:47,569 எப்போதும் அதில் உயிரிழந்த விலங்குகளின் சடலங்கள் இருக்கும். 68 00:08:49,238 --> 00:08:54,284 அது ஒரு விருந்து தான். குளிர் காலம் முழுவதும் அவற்றிற்கு கிடைத்திராத அளவு உணவு. 69 00:09:02,918 --> 00:09:07,089 இந்த பனி மூடிய உலகில், பருவகாலம் தரும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவே. 70 00:09:07,589 --> 00:09:11,343 வசந்த காலம் மிகக் குறுகியதே, கோடைகாலமும் விரைவாக முடிந்துவிடும். 71 00:09:13,595 --> 00:09:17,933 மீண்டும் குளிர்கால சவால்களை எதிர்கொள்ளும் முன், நிறைய பணிகள் காத்திருக்கின்றன. 72 00:09:24,648 --> 00:09:29,027 இன்னும் சற்று கீழே, இந்த ஆறுகளின் வேகம் குறைந்து, அவற்றின் அகலம் அதிகமாகின்றன, 73 00:09:29,111 --> 00:09:32,531 அவை அதிக அளவில் வண்டல் மண்ணை விட்டுச்செல்கின்றன, 74 00:09:32,614 --> 00:09:35,367 அதனால், தொடர் தீவுகள் உருவாகின்றன. 75 00:09:39,454 --> 00:09:42,207 சில விலங்குகள், ஏற்கனவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 76 00:09:42,291 --> 00:09:45,210 வசந்தகால சடங்குகளை ஆரம்பித்துவிட்டன. 77 00:09:49,381 --> 00:09:52,843 இறுதியில், வசந்தம், நிஜமாகவே வந்துவிட்டது. 78 00:09:59,057 --> 00:10:02,728 பல பல ஆண் ஓரின்தோமைமஸ்கள், இந்த ஆண்டின் 79 00:10:02,811 --> 00:10:05,355 மிக முக்கியமான தருணத்திற்காக தயார் செய்துகொண்டிருக்கின்றன. 80 00:10:08,108 --> 00:10:13,447 நெருப்புக்கோழிகளைப் போல காணப்படும் இந்த வினோதமான டைனோசர்கள் இந்த தீவுகளின் பாதுகாப்பில், 81 00:10:13,530 --> 00:10:19,244 ஆழமில்லாத குழிகளைத் தோண்டி, கூடுகட்டுவதன் முதல் கட்டத்தைத் துவங்குகின்றன. 82 00:10:23,582 --> 00:10:25,083 பெண் விலங்குகள் வரும்போது, 83 00:10:25,167 --> 00:10:29,421 மிகச் சிறப்பாக கூடுகளைக் கட்டியுள்ள ஆண் விலங்குகளையே, இனசேர்க்கைக்கு தேர்வு செய்கின்றன. 84 00:10:40,307 --> 00:10:44,811 ஏற்கனவே இடப்பற்றாக்குறை உள்ளதை, தாமதமாக வந்த விலங்குகள் நன்கு உணர்கின்றன. 85 00:10:53,570 --> 00:10:56,782 தீவுகளின் விளிம்பில் தான் இடம் எஞ்சியுள்ளது. 86 00:10:59,535 --> 00:11:02,955 கூடுகட்டுவதற்கு இடத்தைத் தேர்வு செய்வது, முதல் படி மட்டுமே. 87 00:11:08,293 --> 00:11:10,420 அதன் பின் முட்டைகள் இட்டப்பிறகு, 88 00:11:10,504 --> 00:11:13,924 அவற்றை தாவரக்கிளைகளைக் கொண்டு சீரான வெப்ப நிலையில் பாதுகாக்க வேண்டும். 89 00:11:25,519 --> 00:11:29,231 போதிய அளவில் கூடுகட்டும் பொருட்களை சேர்ப்பது என்பது எளிதல்ல... 90 00:11:32,484 --> 00:11:36,655 அதனால் தான் சில ஓரின்தோமைமஸ்கள் திருட்டுத்தனமாக அதைச் செய்கின்றன. 91 00:11:51,795 --> 00:11:54,381 தாமதமாக வருவதில் ஒரு சாதகமான விஷயம் என்னவெனில் 92 00:11:54,464 --> 00:11:57,342 அவற்றின் அக்கம்பக்கம் உள்ள விலங்குகள், ஏற்கனவே கஷ்டப்பட்டு அவற்றைச் செய்திருக்கும். 93 00:12:26,538 --> 00:12:30,667 காவல்காக்கப்படாத கூடு, எப்போதுமே பிறர் கவனத்தை ஈர்க்கும். 94 00:12:34,171 --> 00:12:37,633 இது போன்ற கூட்டு வசிப்பில், திருட்டுத்தனம் மிக சாதாரணம் தான் 95 00:12:38,133 --> 00:12:41,637 அதனால், அந்த தீவுகளில் காணப்படும் கூடுகளில், சில பொருட்கள், 96 00:12:41,720 --> 00:12:44,973 எப்போதும் வேறு ஏதோ ஒரு கூட்டின் பாகமாக இருந்திருக்கும். 97 00:12:46,475 --> 00:12:48,352 ஆனால் களவு ஆபத்தானது. 98 00:12:53,106 --> 00:12:54,191 கையும் களவுமாக பிடிபட்டது. 99 00:13:01,740 --> 00:13:04,451 இரண்டு ஹட்ரோசோர்கள் அந்த பக்கம் வருகின்றன. 100 00:13:07,871 --> 00:13:10,415 அவை அந்த இலையுடன் கூடிய கிளைகளை உண்ணும். 101 00:13:12,459 --> 00:13:15,671 எனவே, தன் சொத்தை பாதுகாக்கும் திறன் தேவைப்படுகிறது. 102 00:13:22,886 --> 00:13:27,182 சிறப்பாக கூடுகட்டும் திறன்களை வளர்த்துக்கொள்ள பல வருடங்கள் ஆகலாம். 103 00:13:29,393 --> 00:13:33,438 ஆனால் வெற்றி என்பது அனுபவத்தை மட்டுமே சாரந்தது அல்ல. 104 00:13:39,152 --> 00:13:43,365 கூட்டம் அதிகமுள்ள வசிப்பிடங்களில், பாதிப்பிற்குள்ளாகும் இன்னொன்றும் உண்டு. 105 00:13:54,293 --> 00:13:58,672 இந்த ஆற்றின் தீவுகள், ஓரின்தோமைமஸ் முட்டைகளுக்கும், அதன் பின் வரும் குஞ்சுகளுக்கும், 106 00:13:58,755 --> 00:14:02,092 அடைக்கலம் தருகின்றன. 107 00:14:07,764 --> 00:14:13,061 இன்னும் வடக்கே போகும்போது, வெப்ப நிலை இன்னும் குறைவாகவும், கடும் சூழல்களும் நிலவும். 108 00:14:14,271 --> 00:14:18,442 இருப்பினும், குறிப்பாக ஒரு இடத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள, அந்த இடத்தைத் தேடி தான் 109 00:14:19,026 --> 00:14:21,904 இந்த மகத்தான தலை அலங்காரமுள்ள ஹட்ரோசோர்கள் போகின்றன. 110 00:14:22,738 --> 00:14:25,240 விசேஷமாக ஒன்று அந்த இடத்தில் உள்ளது. 111 00:14:30,996 --> 00:14:35,334 இந்த டைனோசர்களின் நீண்ட கழுத்துகள், ம்கவும் அழகாக காட்சியளிக்கின்றன 112 00:14:35,417 --> 00:14:36,710 அதோடு, அவற்றிக்கான பெயரையும் வாங்கித் தருகின்றன. 113 00:14:39,338 --> 00:14:42,257 ஓலோரோடைட்டன், "இராட்சத அன்னம்." 114 00:14:44,092 --> 00:14:48,388 காலியாக உள்ள தலை அலங்கார கொண்டைகளால் அவற்றின் அழைப்பொலிகள், பெருக்கப்படுகின்றன. 115 00:15:03,028 --> 00:15:07,449 அவை உலகிலேயே மிக அதிகமான எரிமலைகள் உள்ள நிலவுருவங்களை நோக்கிப் போகின்றன. 116 00:15:17,251 --> 00:15:20,128 அது மிக ஆபத்தான, மற்றும் விரோதமான நிலப்பரப்பு. 117 00:15:32,975 --> 00:15:37,354 ஆனால், இந்த ஓலோரோடைட்டன்கள் வருடாவருடம் அங்கே வருகின்றன... 118 00:15:39,565 --> 00:15:44,653 ஏனெனில் அங்குள்ள எரிமலைகள், நிலத்தை நல்ல வெப்பமுள்ளதாக ஆக்குகிறது. 119 00:15:53,579 --> 00:15:55,956 எனவே, அவை இங்கு தான் தங்கள் கூடுகளை அமைக்கின்றன. 120 00:16:26,486 --> 00:16:32,159 சூடான எரிமலை மண், அவற்றின் முட்டைகளுக்கு இயல்பாகவே அடை காக்கும் தன்மையை கொண்டது. 121 00:16:35,829 --> 00:16:41,502 அந்த மந்தை அங்கு வந்த சில வாரங்களுக்குள்ளேயே, அந்த முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வருகின்றன. 122 00:16:56,767 --> 00:17:00,062 ஹட்ரோசோர்கள், தங்கள் குஞ்சுகளை அக்கறையுடன் காப்பாற்றுகின்றன. 123 00:17:05,192 --> 00:17:08,362 வாய்நிறைய தாவரங்களை கொண்டு வந்து குஞ்சுகள் உண்ணக் கொடுக்கின்றன. 124 00:17:13,700 --> 00:17:17,079 ஒவ்வொரு கூடும் சுமார் 20 குஞ்சுகளைக் கொண்டதாக இருக்கும். 125 00:17:30,342 --> 00:17:35,222 குறுகிய காலமானாலும், நிறைத்து உணவைக் கொடுக்கும் கோடையில் அந்த குஞ்சுகள் வந்துள்ளன. 126 00:17:37,099 --> 00:17:40,602 பல வாரங்களாக சூரியன் மறையவே மறையாமல் இருப்பது, 127 00:17:41,603 --> 00:17:44,356 குதிரைவால் தாவரத்தை அதி வேகமாகவும், 128 00:17:44,439 --> 00:17:48,068 விலங்கு மந்தைகள் உண்ண போதுமான அளவிலும், வளரச்செய்கின்றன. 129 00:17:50,237 --> 00:17:55,117 பசுமையான பயிர்களைவிட, இந்த தாவரங்களில் அதிக சத்துகள் நிறைந்திருக்கின்றன. 130 00:18:00,038 --> 00:18:04,459 அதோடு, இந்த நீண்ட கோடை நாட்களில், ஹட்ரோசோர் குட்டிகள் வேகமாக வளர்கின்றன. 131 00:18:05,043 --> 00:18:09,047 முதல் வருடத்திலேயே, அவை முதிர்ந்த விலங்களின் உயரத்தில் பாதியை எட்டிவிடுகின்றன. 132 00:18:11,133 --> 00:18:13,844 இந்த சமயத்தில், இந்த ஈர எரிமலை நிலப்பரப்புகள் தான் 133 00:18:13,927 --> 00:18:16,889 பூமியிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் இடங்கள். 134 00:18:19,850 --> 00:18:21,393 அது நீருக்கு மேலே... 135 00:18:23,520 --> 00:18:26,523 மற்றும் கீழேயும் பொருந்தும். 136 00:18:28,567 --> 00:18:33,488 எனினும், இந்த விளையும் தன்மையே ஹட்ரோசோர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது. 137 00:18:35,532 --> 00:18:39,995 வெதுவெதுப்பான, ஆழமற்ற குட்டைகள் தான் கொசுக்களுக்கு அற்புதமான 138 00:18:40,078 --> 00:18:42,331 இனப்பெருக்கப் பரப்பு. 139 00:18:48,086 --> 00:18:53,008 ஒவ்வொரு ஆண்டும் இந்த சொர்க்கம், உயிருள்ள நரகமாக மாறுகிறது. 140 00:18:56,386 --> 00:18:59,723 ஹட்ரோசோர்களுக்கு மிக மெல்லிய தோல் உள்ளது, 141 00:18:59,806 --> 00:19:03,769 அதனால், இந்த இரத்தத்தைக் குடிக்கும் பூச்சிகளிடமிருந்து, அவற்றிற்கு பாதுகாப்பே இல்லை. 142 00:19:10,609 --> 00:19:12,945 இடைவிடாத தொந்தரவு, அதை உண்ண விடுவதில்லை, 143 00:19:13,028 --> 00:19:15,531 அதனால் மிகவும் மெலிந்துவிடுகின்றன. 144 00:19:17,074 --> 00:19:21,703 மேலும், உயிருக்கு ஆபத்தாகும் அளவில் குட்டிகள், தங்கள் இரத்தத்தை இழக்கலாம். 145 00:19:27,709 --> 00:19:32,047 இறுதியாக, இந்த பிடுங்கலிலிருந்து தப்பிக்க, அந்த மந்தை வேறு இடத்திற்கு மாற வேண்டியுள்ளது. 146 00:19:37,344 --> 00:19:40,889 குட்டிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை எனில், தாய் அவற்றை கைவிடுகின்றன. 147 00:20:02,536 --> 00:20:07,499 அவை மேல் மட்டத்திற்கு போகப்போக, அங்கு வீசும் பலமான காற்று, சற்றே இதமாக இருக்கிறது. 148 00:20:09,585 --> 00:20:13,005 ஆனால், அது அவ்வளவு தூரம் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும். 149 00:20:26,059 --> 00:20:32,274 நூற்றுக்கணக்கான ஹட்ரோசோர் குட்டிகள் பிறந்தாலும், பத்து சதவிகிதம் தான் முதல் வருடத்தை கடக்கின்றன. 150 00:20:34,735 --> 00:20:38,947 எனினும், அப்படி கடந்து வாழ்பவற்றிற்கு, முதிர்ந்த வயதை எட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 151 00:21:10,145 --> 00:21:12,898 இந்த எரிமலை பள்ளத்தாக்கில் கூடுகட்டுவதால், 152 00:21:12,981 --> 00:21:17,486 அந்த பெற்றோர்கள் தங்கள் குட்டிகளுக்கு வாழ்க்கையில் ஒரு சிறந்த துவக்கத்தைத் தருகின்றன. 153 00:21:22,533 --> 00:21:27,204 குறுகிய மற்றும் மிதமான துருவப் பிரதேசத்தின் கோடைகாலம் நிறைந்த உணவைத் தருவதாக இருப்பினும், 154 00:21:27,788 --> 00:21:30,123 அது பல அபாயங்களையும் உடன் தருகிறது. 155 00:21:33,418 --> 00:21:37,714 சூடான காற்று மேல் எழுந்து, மின்சார வயப்படுகிறது. 156 00:21:39,800 --> 00:21:44,012 அது அடிக்கடி, மிக அதிர்ச்சி தரும் இடி மின்னல்களைக் கொண்ட புயல்கைளை உருவாக்குகிறது. 157 00:21:54,231 --> 00:21:55,899 அமெரிக்காவின் வடப்பகுதியில், 158 00:21:55,983 --> 00:21:59,570 இடைவிடாத சூரிய ஒளியால் தழைத்து வளர்ந்த தாவரங்கள் எல்லாம் 159 00:21:59,653 --> 00:22:02,364 இப்போது சுள்ளிக்கட்டைகளாக உலர்ந்து கிடக்கின்றன. 160 00:22:10,706 --> 00:22:13,584 பெரும்பாலான விலங்குகள் இந்த தீயிலிருந்து தப்பித்து ஓடுகின்றன. 161 00:22:15,002 --> 00:22:18,380 ஆனால் சில விலங்குகளுக்கோ, இந்த நாசம், பல வாய்ப்புகளை உருவாக்குகின்றது. 162 00:22:23,802 --> 00:22:27,472 டுரூவோடோன்டிட் எனும் இந்த ஆறு-அடி-நீள டைனோசர், 163 00:22:27,556 --> 00:22:30,726 தெரோபாட் பிரிவின் சிறிய உறுப்பினர்களின் ஒரு பிரிவு. 164 00:22:42,946 --> 00:22:47,868 புகை மண்டலத்திலும் தெளிவாக பார்க்கும் படியாக, அதன் பெரிய கண்களில் கூர்மையான பார்வை உள்ளது. 165 00:22:49,369 --> 00:22:53,457 அதோடு, அதன் உடல் அளவு உள்ள விலங்குகளை ஒப்பிடும்போது, இதன் மூளை தான் பெரிதாக இருக்கும். 166 00:22:58,921 --> 00:23:05,010 ஆர்க்டிக் பகுதியில் புத்தியுள்ள, சூழலுக்கு ஏற்றபடி மாறக்கூடய வெற்றிகரமான வேட்டை விலங்கு இது தான். 167 00:23:15,896 --> 00:23:17,689 காட்டுத் தீயின் விளிம்பில், 168 00:23:17,773 --> 00:23:22,486 நெருப்பிலிருந்து தப்பியோடும் விலங்களுகளை இரையாக பிடித்துண்ண, டுரூவோடோன்டிட்கள் குழுமுகின்றன. 169 00:23:31,411 --> 00:23:35,374 அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இந்த சாமர்த்தியமான ஆர்க்டிக் வேட்டை விலங்கிற்கு, 170 00:23:35,457 --> 00:23:38,585 நெருப்பை பரப்பும் எதுவும், இன்னும் அதிக அளவு வாய்ப்புகளைக் கொடுப்பதாக அமைந்தது. 171 00:24:10,200 --> 00:24:11,243 வெற்றி. 172 00:24:26,758 --> 00:24:28,677 அந்த குறுகிய கோடைகாலமும் முடிவுக்கு வர, 173 00:24:28,760 --> 00:24:34,057 கோடைக்கால காட்டுத்தீயை மீறி பிழைத்த வனம், நிறம் மாறத் தொடங்குகிறது. 174 00:24:40,355 --> 00:24:45,319 பல மாத இருட்டு நிலவும் முன், இலையுதிர் காலத்தின் இறுதிச் செழுமை இது. 175 00:24:54,453 --> 00:24:58,916 அன்டார்க்டிக்கில், கோடைகலத்திலும் கூட, அதிக உயரமுள்ள 176 00:24:58,999 --> 00:25:00,834 மலைகளைப் பனி தொற்றிக் கொள்கிறது. 177 00:25:03,212 --> 00:25:09,301 ஆனால் இப்போது, வெப்ப நிலை குறைந்து, நாட்பொழுது குறுகிவரும் நேரத்தில், 178 00:25:09,843 --> 00:25:13,847 துருவ பிரதேசங்களில் மீண்டும் குளிர் காலம் பரவி வருகிறது. 179 00:25:32,366 --> 00:25:35,577 விலங்குகள் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். 180 00:25:47,798 --> 00:25:52,427 தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே காணப்படும் வேறு குறிப்பிட்ட டைனோசர்கள் உள்ளன. 181 00:26:00,102 --> 00:26:06,149 இவை மூன்றும், சிறிய வகை செடிகளை உண்ணும் இளம் அன்டார்க்டோபெல்டா வகை டைனோசர்கள். 182 00:26:09,945 --> 00:26:14,157 உலகில் இவை தான் மிக அதிக முட்களை உடைய விலங்குகளும் கூட. 183 00:26:22,040 --> 00:26:25,043 இருந்தாலும், குட்டி விலங்குகள் சேர்ந்து இருப்பதே பாதுகாப்பு. 184 00:26:33,218 --> 00:26:34,678 இந்த தூரத்து தென்பகுதியில், 185 00:26:34,761 --> 00:26:39,266 அவை உணவிற்காக நம்பியிருக்கும் செடிகள் பல மாதங்கள் வளருவதேயில்லை. 186 00:27:04,541 --> 00:27:09,713 குளிர் காலம் நெருங்கி வரும்போது, குட்டிகள் ஓய்வெடுப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றன. 187 00:27:19,806 --> 00:27:24,394 ஒன்றாக சேர்ந்து அடைக்கலம் புகும்போது, வெப்பத்தையும், அதனால் ஆற்றலையும் சேமிக்க முடியும். 188 00:27:27,356 --> 00:27:32,236 முன்னங்கால்களில் உள்ள பலத்தினால், அவை இந்த குளிர் கால வசிப்பிடத்தை பெரிதாக்க முடியும். 189 00:27:41,119 --> 00:27:44,581 ஆனால் ஒவ்வொரு முறை அவை திரும்பி வரும்போதும், சற்று வளர்ந்திருக்கின்றன. 190 00:27:48,126 --> 00:27:51,547 அவற்றின் குகை சற்றே சிறிதாகத் தோன்றுகிறது, 191 00:27:52,840 --> 00:27:58,220 அப்போது சகோதரத்துவம் எல்லாம் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 192 00:28:15,362 --> 00:28:19,533 வளர்ந்து வரும் ஒவ்வொரு விலங்கிற்கும் இது மிக அழுத்தமான தருணம். 193 00:28:24,538 --> 00:28:27,416 இது தான் அவை பிரிந்து, தங்கள் முதல் அடிகளை வைத்து 194 00:28:27,499 --> 00:28:33,338 தங்களுக்கென தனி வட்டாரத்தை நிலைநாட்டும் தருணம். 195 00:28:50,105 --> 00:28:54,401 மீண்டும் மந்தை மந்தைகளாக ஹட்ரோசோர்கள் இடம் மாறுகின்றன. 196 00:28:58,071 --> 00:29:01,867 இங்கு உணவு குறைந்துவிட்டதால், இந்த பெரும் தாவர உண்ணிகள், மீண்டும் 197 00:29:01,950 --> 00:29:05,162 வெதுவெதுப்பான நிலபரப்பிற்கு உணவைத் தேடி போகின்றன... 198 00:29:13,670 --> 00:29:18,383 மற்ற விலங்குகள் துருவ பிரதேசங்களின் உறைபனி குளிர் காலத்தை கடக்க, விட்டுச் செல்கின்றன. 199 00:29:32,481 --> 00:29:34,316 பொருத்தமான வசிப்பிடங்களைத் தேடும்போது 200 00:29:34,399 --> 00:29:38,195 விலங்குகள் தங்கள் பிறப்பிடங்களை விட்டு வெகு தூரம் செல்லக்கூடும். 201 00:29:39,988 --> 00:29:43,492 அந்த தேடலில் பல விலங்குகள் உயிர் பிழைப்பதில்லை. 202 00:29:55,379 --> 00:29:59,424 ஒரு நல்ல வட்டாரம் என்பது, நிழல் கிடைக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். 203 00:30:02,010 --> 00:30:03,762 அது ஒரு குகையாக இருக்கலாம். 204 00:30:11,854 --> 00:30:14,273 கடும் குளிர் நிலவும் மாதங்களிலும், 205 00:30:14,356 --> 00:30:17,818 பெரும்பாலும் குகைகளில் வெப்ப நிலை மாறுவதில்லை. 206 00:30:21,655 --> 00:30:25,409 ஆனால் இந்த குகையைப் பார்த்து ஈர்க்கப்பட்டது இந்த விலங்கு மட்டுமில்லை. 207 00:30:30,372 --> 00:30:33,083 இந்த குகை ஒளியுடன் மிளிர்கிறது. 208 00:30:46,763 --> 00:30:51,476 கொசு போன்ற சிறிய பூச்சிகளின் லார்வாவிலிருந்து தான், இந்த மினுமினுப்பு வருகிறது, 209 00:30:51,560 --> 00:30:55,355 இரையை ஈர்ப்பதற்காக அவை இந்த ஒளியை உருவாக்குகின்றன. 210 00:31:09,536 --> 00:31:11,455 மோசமான கடும் குளிரிலிருந்து தப்பிக்க 211 00:31:11,538 --> 00:31:16,043 அன்டார்க்டோபெல்டாவிற்கு இதுவே மிகப் பொருத்தமான இடம். 212 00:31:18,003 --> 00:31:22,883 இந்த வாழும் நட்சத்திரங்களுக்கு கீழே அது பாதுகாப்பாக இருக்கும்... 213 00:31:24,551 --> 00:31:29,097 அதற்குள் வெளியே, பனி கொட்ட ஆரம்பிக்கிறது. 214 00:31:39,024 --> 00:31:43,695 கடும் குளிர் உள்ள மாதங்களில் ஆர்க்டிக்கின் மேலே, தூரத்தில் உள்ள வட தேசமானது 215 00:31:43,779 --> 00:31:47,199 உறைந்து போய், ஒரு அற்புத உலகமாக காட்சியளிக்கும். 216 00:31:50,327 --> 00:31:54,831 எல்லா டைனோசர்களுமே இடம் பெயருவதோ அல்லது நிழல் தேடுவதோ இல்லை. 217 00:31:56,291 --> 00:31:59,503 அவற்றில் மிகப்பெரியவற்றிற்கு, கடும் குளிரைத் தாங்கும் வலிமை உள்ளது. 218 00:32:03,173 --> 00:32:05,384 பாக்கிரைனோசரஸ். 219 00:32:06,552 --> 00:32:11,390 இரண்டு-டன் எடையுள்ள, தாவர உண்ணிகளான இவை, அலங்காரமான தலைக் கொம்புகளுடன் இருப்பவை. 220 00:32:12,724 --> 00:32:15,060 அவை காட்டிற்குள் தஞ்சம் புகுந்து, 221 00:32:15,143 --> 00:32:18,105 உறங்கும் மரங்களின் கடைசி இலைகளை பிய்த்தெடுத்து 222 00:32:18,188 --> 00:32:20,899 விழுந்து கிடக்கும் கனிகளுக்காக ஃபெர்ன்களை வேறோடு எட்டுத்து தேடுபவை. 223 00:32:25,404 --> 00:32:27,155 இலையுதிர் கால இனச்சேர்க்கை நேரம் முடிந்துவிட்டது, 224 00:32:29,283 --> 00:32:34,663 இருப்பினும் ஆதிக்கமில்லாத ஆண் விலங்குகள் சமூக வழிவரிசையில் தங்கள் நிலையை உயர்த்த முயல்கின்றன. 225 00:32:36,582 --> 00:32:38,876 ஆனால் யார் அதிகாரத்தில் இருப்பது என்று இரண்டிற்கும் நினைவில்லை போலும். 226 00:32:46,216 --> 00:32:50,220 வயதில் முதிர்ந்த காளை இன்னும் அச்சுறுத்தும் பலத்துடன் உள்ளது 227 00:32:50,304 --> 00:32:52,639 அதை எதிர்ப்பது அத்தனை எளிதான சவால் அல்ல. 228 00:33:01,565 --> 00:33:05,861 சண்டையிடும் காளைகளுக்கு உண்ணவோ, ஓய்வு பெறவோ நேரம் இருப்பதில்லை. 229 00:33:07,070 --> 00:33:11,617 உணவு குறைவாக இருப்பதால், இப்போது தங்கள் வலிமையை மீண்டும் பெறுவது கடினம், 230 00:33:11,700 --> 00:33:14,077 அதோடு காயங்கள் எளிதில் ஆறுவதில்லை. 231 00:33:17,706 --> 00:33:19,333 விஷயங்களை இன்னும் மோசமாக்குவது போல்... 232 00:33:21,960 --> 00:33:27,382 ஆர்க்டிக்கின் மிக வலிமையான வேட்டை விலங்கு எப்போதும் இரையைத் தேடி அலைகிறது. 233 00:33:39,561 --> 00:33:41,605 நனூக்சாரஸ். 234 00:33:45,234 --> 00:33:47,861 டி. ரெக்ஸின் சிறிய தம்பியான இது, 235 00:33:47,945 --> 00:33:51,949 இருந்தாலும் ஒரு பாக்கிரைனோசரை எதிர்கொள்ளும் அளவிற்கு பெரியது. 236 00:34:01,834 --> 00:34:05,712 இந்த பழம்பெரும் எதிரிகளுக்கு, இந்த சுற்றுச்சூழலில், 237 00:34:05,796 --> 00:34:11,760 இந்து சண்டையானது, எதிர்பாராத தாக்குதலினால் வெல்லப்படுவதில்லை, சாமர்த்தியம் மட்டுமே வெல்லும். 238 00:34:26,775 --> 00:34:30,821 மரங்களுக்கு நடுவே, இந்த மந்தை ஒன்றாக நிற்பது கடினம். 239 00:34:32,197 --> 00:34:34,867 தனி விலங்குகளை எளிதாக தனிமைப்படுத்தலாம். 240 00:34:38,996 --> 00:34:45,918 நடுக்கத்துடன் அந்த மந்தை, சாமர்த்தியமாக திறந்த வெளியிற்கு திரும்பி விடுகின்றன. 241 00:34:48,922 --> 00:34:51,049 அந்த நனூக்சாரஸ்களும் பின் தொடர்கின்றன. 242 00:35:13,947 --> 00:35:18,827 அந்த திறந்த வெளியில், அந்த மந்தையின் விலங்குகள் நெருங்கி வந்து 243 00:35:18,911 --> 00:35:24,333 கவசமிட்ட தலைகளையும், தசைகளையும் கொண்ட, உடைக்க முடியாத ஒரு சுவரை எழுப்ப முடியும். 244 00:35:40,432 --> 00:35:42,643 பனிப்புயல் இன்னும் தீவிரமடைகிறது. 245 00:35:47,147 --> 00:35:48,982 மிகவும் அழுத்தமான ஒரு சூழ்நிலை. 246 00:35:51,443 --> 00:35:54,780 இது போன்ற எதிர்ப்புகள் பல நாட்கள் வரை நீடிக்கலாம். 247 00:36:11,588 --> 00:36:15,300 எல்லாம் சேர்ந்து உள்ள வரை அந்த மந்தை பாதுகாப்பாக இருக்கும். 248 00:36:18,720 --> 00:36:21,974 ஆனால், நானூக்சார்கள் காத்திருக்கின்றன... 249 00:36:24,184 --> 00:36:27,479 அவ்வப்போது பலவீனத்தையும் பரிசோதிக்கின்றன. 250 00:36:42,494 --> 00:36:45,581 பனிப்புயல் ஒரு தற்காலிக அமைதியை கொண்டு வருகிறது. 251 00:37:07,352 --> 00:37:13,901 ஆனால் அது முடிந்தவுடன், சண்டை மீண்டும் தொடர்கிறது. 252 00:37:21,783 --> 00:37:23,744 இது தைரியத்தை பரிசோதிப்பதாகும், 253 00:37:24,453 --> 00:37:28,123 ஒரே ஒரு விலங்கு அணியை விட்டு விலகினால் போதும்... 254 00:37:30,667 --> 00:37:33,837 விரைவில் பீதி பரவிவிடுகிறது. 255 00:37:38,842 --> 00:37:42,513 மந்தை ஓட்டமெடுப்பதால், இந்த வேட்டை விலங்குகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. 256 00:37:54,858 --> 00:37:56,568 வேட்டை இப்படி தொடர்கிறது, 257 00:37:56,652 --> 00:38:00,489 ஒரு களைப்படையும் காளை மற்ற விலங்குகளுடன் ஈடுகொடுக்க முடியாத வரை. 258 00:38:05,661 --> 00:38:11,500 தன்னை தாக்கும் விலங்குகளை திரும்பி நின்று எதிர்கொள்வது தான் அதனால் செய்ய முடிந்தது. 259 00:38:33,647 --> 00:38:37,651 ஒரு பாக்கிரைனோசர் சண்டையில் தோற்றது. 260 00:38:41,864 --> 00:38:44,950 ஆனால் இந்த போர், குளிர் காலம் முழுவதும் தொடரும். 261 00:38:50,122 --> 00:38:53,083 இங்குள்ள விலங்குகள், மீண்டும் சூரியன் வந்து, இந்த அற்புதமான விலங்குகளுக்கு ஆசுவாசம் தரும் வரை, 262 00:38:53,166 --> 00:38:58,714 இவை, இப்போது பல மாதங்கள் நீடிக்கும் முழு இருட்டை சமாளித்தாக வேண்டும் 263 00:39:00,215 --> 00:39:02,926 இந்த உறைபனி உலகத்தில். 264 00:39:11,810 --> 00:39:13,770 Prehistoric Planetல் அடுத்து வருவது, 265 00:39:13,854 --> 00:39:17,983 வரலாற்றிற்கு முந்தைய காடுகளில் சுற்றிப் பிணைந்திருக்கும் மரங்களின் நடுவே 266 00:39:18,066 --> 00:39:21,695 ஒரு ஒட்டகச்சுவிங்கியின் அளவு உள்ள ராட்சஸ பறக்கும் விலங்கு ஒன்று, இரையை வேட்டையாடுகிறது. 267 00:39:22,988 --> 00:39:25,532 இந்த பசுமையான கிரகத்தின் திரைக்குக் கீழே, 268 00:39:25,616 --> 00:39:31,246 டைனோசர்கள் தூக்குதல், காட்சியளித்தல், மற்றும் ஆழ் பூமிக்குள் பயணம், என பலவும் செய்கின்றன. 269 00:39:31,330 --> 00:39:34,416 இந்த கதைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறிய, 270 00:39:34,499 --> 00:39:38,921 உடனே, Prehistoric Planet இணையதளத்தை அணுகவும். 271 00:41:06,967 --> 00:41:08,969 தமிழாக்கம் அகிலா குமார்